மரியாதை கொடுக்காத ஜூனியரை பட்டா கத்தியால் சரமாரியாக தாக்கிய மாணவன்

பல்லாவரத்தில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில் கார்த்திக் என்ற மாணவன் 5 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் ரவுடி போல் வலம் வந்த கார்த்திக்கிற்கு பயந்து மாணவர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பதும், அவரை பார்த்தால் பயப்படுவதுமாக நடந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரியில் புதிதாக சேர்ந்த அஸ்வின் என்ற மாணவன், கார்த்திக்குக்கு மரியாதையும் கொடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அஸ்வினை கல்லூரி அருகே வைத்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் கை, கழுத்து, தலை உள்ளிட்ட பாகங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஸ்வினை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பியோடிய கார்த்திக்கை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version