சச்சின் டெண்டுல்கருக்கு லாரஸ் விருது வழங்கி கவுரவிப்பு..

விளையாட்டு துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லாரஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அத்துடன் பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி, மற்றும் கார்பந்தய வீரரான ஹேமில்டனுக்கும் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் விளையாட்டுதுறையில் பங்காற்றி வரும் வீரர்களுக்கு ஓவ்வொரு ஆண்டும் லாவ்ரெஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான லாவ்ரெஸ் விருது ஜெர்மன் தலைநகர் பெர்லினின் வழங்கப்பட்டது. அதில், கிரிக்கெட்டிற்கு அளித்த சிறந்த பங்களிப்பிற்காக பிரபல விளையாட்டு வீரர்களை பின்னுக்கு தள்ளி அதிக வாக்குகளை பெற்று அனைவரின் விருப்பமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் லாரஸ் விருதை தட்டிச் சென்றார்.

அதேபோல் சிறந்த விளையாட்டு வீரர்களாக ஃபார்முலா ஒன் கார்பந்தய சாம்பியன் ஹேமில்டன் மற்றும் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கும் வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த அணியாக தென் ஆப்பிரிக்காவின் ரக்ஃபி அணியான ஸ்பிரிங்போக்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், மீண்டு வந்த சிறந்த  வீராங்கனைக்கான விருது ஜெர்மனியின் கார்பந்தய வீராங்கனையான சோஃபியா ஃப்லோர்ச்சுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version