இந்தியாவின் முதல் அதிவேக ரயிலை இந்திய ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லொஹானி துவக்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சென்னையில் உள்ள இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ரயில்-18 என்ற இந்த ரயிலின் செயல்பாட்டை இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வானி லொஹானி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள முதல் ரயில் இதுவாகும். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலின் முகப்பு பகுதி, புல்லட் ரயில் ஏரோ டைனமிக் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் போபால் முதல் டெல்லி வரை இயக்கப்படவுள்ளது.