மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா இன்று

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version