சிட்னியில் இருக்கும் ஹோட்டல் ஒன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை எதிர்த்து போராடுபவர்களுக்காக நிதி திரட்ட 338 நீளமுள்ள பீசாவை உருவாக்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஆரம்பித்தது.இந்த காட்டுத்தீயால் 3000 வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளது.28 நபர்கள் இறந்துள்ளனர்.
எனவே காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காவும், அதை எதிர்த்து போராடுபவர்களுக்காகவும் பல வகையில் நிதிகள் திரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சிட்னியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ராட்சச பீசாவை தயாரித்து அதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது .
இந்த பீசா 336 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டுள்ளது.மேலும் இந்த பீசா 4,000 துண்டுகளாக வெட்டப்பட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 3000 நபர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.