ஜார்ஜியாவில் அந்நட்டின் உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி நூற்றுக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்து 3-வது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்ஜியா நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் செர்கேய் கவுரிலோவ் கலந்து கொண்டார். அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி கவுரிலோவ் தனது உரையை நிறைவு செய்துள்ளார். இதனிடையே ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரை சபாநாயகர் இருக்கையில் அமரும்படி ஜார்ஜியா உள்துறை அமைச்சர் ஜார்ஜி ககாரியா பணித்ததாக கூறப்படுகிறது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் நேரலையில் கடுமையாக விமர்சித்தன.
இந்த சம்பவத்தால் தேசத்திற்கு பெரும் தலைகுனிவு எற்பட்டுள்ளதாக கூறி தலைநகரான திபிலிசியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உள்துறை அமைச்சர் ஜார்ஜி ககாரியா பதவி விலக கோரியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.