திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரண் அடைந்த சுரேஷை 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க செங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவத்தில், தப்பியோடிய சுரேஷ் என்ற கொள்ளையன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சுரேஷ், திருவாரூரில் காவல்துறையினர் வாகன சோதனையின் போது தப்பியோடினார். இதனையடுத்து காவல்துறையினர் கொள்ளையன் சுரேஷை வலைவீசி தேடி வந்தனர். தேடப்பட்டு வந்த கொள்ளையன் சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில் சரண் அடைந்த கொள்ளையன் சுரேஷை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.