மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் கைதான இலங்கை நபர் விடுதலை

மாலத்தீவு முன்னாள் அதிபரை கொலை செய்ய முயற்சித்ததாக கைதான இலங்கையை சேர்ந்தவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இருந்த போது அவரை கொல்ல முயற்சி நடைபெற்றது. அப்துல்லா யாமீன், ஹஜ் பயணம் முடித்து விட்டு திரும்பும் போது 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அதிவிரைவு படகில் சென்றார். அப்போது குண்டு வெடித்ததில் காயமின்றி தப்பினார்.

இந்த வழக்கில் இலங்கையை சேர்ந்த லஹிரு மதுசங்க உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க விடுதலை செய்யப்பட்டு இலங்கையை வந்தடைந்தார். இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version