கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 4.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 73 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடிநீருக்கு பயன்படும் குளத்தை 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்கான பூமி பூஜை விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் அந்த குளத்தின் பகுதியிலேயே நடைபெற்றது.
இந்த பூமி பூஜை விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். விவசாயத்தை பாதுகாக்கவும், தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும் அரசு மேற்கொண்டு வரும் இந்த பணிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.