ஸ்டாலினைப் போல் முதலமைச்சர் சிங்கப்பூரில் ஓய்வெடுக்கவில்லை: கே.டி.ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டு உள்ள நிலையில், ஸ்டாலினைப் போல் முதலமைச்சர் சிங்கப்பூரில் ஓய்வெடுக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்கும் போது முதலமைச்சர் சிங்கப்பூரில் ஒன்றும் ஒய்வு எடுக்கவில்லை, மாறாக தண்ணீர் பிரச்சினை தீர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகரில் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அடுத்த மாதம் தமிழக முதல்வர் விருதுநகர் வர உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version