தென்பெண்ணை ஆற்றை கடந்து கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கோதண்டராமர் சிலை 10-வது நாளாக தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலையை பாலம் வழியாக கொண்டு செல்ல நெடுஞ்சாலை துறையினர் அனுமதி மறுத்ததால், தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், மண்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பகுதிகளில் கான்கிரீட் குழாய்கள் அமைத்து அதன் மீது மண்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி 80 சதவீதம் நிறைவேறி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. எனவே, நாளைக்கும் கோதண்டராமர் சிலை தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.