நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் உலா வரும் ஒற்றைக் கரடியால் தேயிலை தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள், கரடி, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு வழக்கம் போல் இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற போது, கரடி ஒன்று தேயிலை தோட்டத்தில் உலா வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எற்பட்டுள்ளது.
இந்நிலையில் கரடியை தேயிலை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.