கொடநாடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய 8 பேர் நீதிபதி முன்பு நேரில் ஆஜாராகினர்.
முக்கிய குற்றவாளிகளான சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.