குழந்தையை, சாப்பிட்ட ஓட்டலிலேயே மறந்து விட்டு வந்த பிரபல நடிகை!!! என்ன உலகமடா?

பிரபல நடிகை கிம் ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று தனது குழந்தையை மறந்துபோய் ஓட்டலில் விட்டுவிட்டு வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கிம் ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கிருந்து அவர் கிளம்பும் போது வெளியில் காத்திருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை படம் பிடிக்க ஆரம்பித்தனர். கிம் தனியாக தான் ஓட்டல் விட்டு வெளியே வந்தார். வந்தவர் திடீர்ரென்று காரை பார்த்துவிட்டு மீண்டும் ஓட்டலுக்கு சென்று மீண்டும் வந்தார். ஆனால் வரும் போது தனியாக வரவில்லை அவரது குழந்தையை ஓட்டலில் இருந்து தூக்கி வந்துள்ளார்.

கிம் தன்னுடைய குழந்தையை ஓட்டலில் மறந்து விட்டுவிட்டு வந்தார் என்று தற்போது பத்திரிக்கைகளில் மிக பெரிய செய்தியாகியுள்ளது. ஆனால் கிம் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய குழந்தையை நான் மறந்து விட வில்லை. கார் சீட் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க தான் வெளியில் வந்தேன் என்று கூறியுள்ளார்.

தற்போது பேஷன் வாரம் வருவதால், கிம்மின் 4 வருடத்திற்கு முன்பு நடத்த பழைய புரளியை தற்போது மீண்டும் தூசி தட்டியுள்ளது  அமெரிக்க தொலைக்காட்சி.

Exit mobile version