மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சுப்பையா – கிருஷ்ணவேணி. கடந்த 5-ந் தேதி சுப்பையா நடத்தி வரும் கோவிலுக்கு 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி தம்பதியர் இருவரையும் காரில் உசிலம்பட்டி விலக்கு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் இருவரையும் விட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போது மர்ம நபர்களிடம் சுப்பையா அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளார். இதனால் பதற்றமடைந்த மர்ம கும்பல் இருவரையும் அதே இடத்தில் இறக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுப்பையாவின் நண்பர் கார்த்திகேயன் உட்பட 9 பேரை கைது செய்தனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தம்பதி கடத்தல்.. ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: demanding Rs.5 lakhincome tax officialsKidnapping couplepretendingThreatened
Related Content
கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் !
By
Web team
January 30, 2023
"சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன்" அதிகாரிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ
By
Web Team
May 16, 2021