உச்ச நீதிமன்றத்தின் திடீர் பணி நீக்க நடவடிக்கையால் கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் தினக்கூலி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் பிஎஸ்சி தேர்வு மூலம் பணியில் அமர்த்தப்படாத அரசு போக்குவரத்து கழகத்தின் தினக்கூலி ஊழியர்கள் 3 ஆயிரத்து 200 பேரை உச்ச நீதிமன்றம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூணாறு மாவட்டத்தில் மட்டும் 45 தினக்கூலி போக்கு வரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் 12 வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.