கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலான அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கைகேரளா கனமழை
Related Content
பொறுப்பின்றி செயல்படும் TANGEDCO... அரசு செய்ய வேண்டியது என்ன?
By
Web Team
July 23, 2021
கேரளாவில் கனமழை - 54 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு
By
Web Team
August 11, 2018