தமிழ் சினிமாவில் ’இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்,தொடர்ந்து ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பின்பு, நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பால் நம்மை கட்டிப்போட்டுவிட்டார்.தற்போது அவர் பாலிவுட்டில் நடித்து கொண்டிருக்கும் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.அவர் ஜிம்மில் இருந்தபடியே ஒரு செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் நியூ லுக்கை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.மேலும், தற்போது கீர்த்தி சுரேஷின் சிலிம் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.