’மிஸ் இந்தியா’ படத்தில் புதிய தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்..

மிஸ் இந்தியா படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.அதில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.தேசிய விருது பெற்றததை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை EastCoast புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, நரேந்திர நாத் இயக்கி வருகிறார். இந்த படமானது கீர்த்தி சுரேஷின் 20வது படமாகும்.

இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து மிகவும் மெல்லிய உடலில் தோற்றமளித்துள்ளார்.மார்டனாகவும், ஹோம்லியாகவும் நடித்துள்ளார்.இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி திரைத்துறையில் அதிகம் பேசப்படும் ஒன்றாக பரவி வருகிறது.மகாநடி படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ’மிஸ் இந்தியா’ படத்திலும் மைய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

’மிஸ் இந்தியா’ திரைப்படமும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version