திருமண பத்திரிக்கை கொடுக்க காரில் சென்ற தம்பதியினர் திடீர் மாயம்

கரூரில் காரில் சென்ற தம்பதியினர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் அருகே ஓரமாக கார் ஒன்று காலை முதல் இரவு வரை நின்றுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியில் சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காரில் சென்றவர்கள் மதுரையை சேர்ந்த செல்வராஜ் மற்றும் வசந்தாமணி தம்பதியினர் என்பதும், மகனின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வெள்ளகோவில் சென்றுவிட்டு திரும்பியுள்ளதாகவும் தெரிகிறது.

அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது வீடு திரும்பவில்லை என்று கூறியுள்ளனர். காரில் மிளகாய் தூள் சிதறி கிடந்துள்ளது. பணத்திற்காக மர்ம கும்பல் அவர்களை கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version