வடமாநிலங்களில் கார்த்திகா பூர்ணிமா விழா கொண்டாட்டம்

கார்த்திகை தீப வழிபாடு திருவிழா உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் புனித நீராடலுடன் கொண்டாடப்பட்டது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவாலயங்கள் விழாக்காலம் பூண்டுள்ளன. இதேபோன்று, வடமாநிலங்களில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த விழா களைகட்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரைக்கு வந்த பக்தர்கள் தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து புனித நீராடி வழிபட்டனர். ஒடிசாவில் நீர்நிலையில் புனித நீராடிய மக்கள், நெய் தீபங்களை மிதக்க விட்டு வணங்கினர். கண்கவரும் வகையில் செய்யப்பட்ட அழகிய மிதவைகள், தண்ணீரில் மிதந்து பொதுமக்களை கவர்ந்தன. இதேபோல், பீகாரிலும் மக்கள் வழிபாடு நடத்தினர்.

Exit mobile version