சிவகங்கையில் பிரசாரத்தின் போது, கார்த்தி சிதம்பரத்தை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் பேசிய பணத்தை கொடுக்காததால் சலசலப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, கீழப்பசளை கிராமத்தில், பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வந்தார். அவரை வரவேற்று ஆரத்தி எடுக்க பணம் தருவதாக கூறி, பெண்களை காங்கிரஸார் தயார் செய்திருந்தனர்.
எனினும் ஆரத்தி எடுத்த பின்னர் 25 பெண்களுக்கு வெறும் 800 ரூபாயை மட்டுமே கொடுத்ததால், அப்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பணத்தை பிரிப்பதில் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் , அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது பொதுமக்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியது.
கனிமொழி தொடங்கி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரசாரங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.