கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரியை மறித்து, ஓட்டுநரை ஜெய் கர்நாடகா என கோஷமிடுமாறு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவிரி நீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்கனவே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகவிற்கு சென்ற தமிழக பதிவு எண் கொண்ட லாரியை, அங்குள்ள இளைஞர்கள் மறித்து, ஓட்டுநரை ஜெய் கர்நாடகா என கோஷமிடுமாறு மிரட்டி உள்ளனர். லாரி ஓட்டுநரை கர்நாடக இளைஞர்கள் மிரட்டும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்கும் வகையில் செயல்படும், இதுபோன்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.