கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு

 

கர்நாடக இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் மண்டியா, சிவமொக்கா, பல்லாரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் ராமநகர், ஜமகண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக ஜமகண்டியில் 81 புள்ளி 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மண்டியாவில் 53 புள்ளி 93 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதனிடையே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால் கர்நாடகா அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version