கர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு கவிழ்ந்தது. இதனால், அரசுக்கு எதிராக செயல்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், 17 சட்டப்பேரவை தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல், நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளை ஆர்வத்துடன் வாக்காளர்கள் செலுத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை 9-ந் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

Exit mobile version