திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் கைகளில் காப்புக் கட்டிக்கொண்டு விரதத்தைத் தொடங்கினர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புக்கட்டித் தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டிக் கோவிலில் நாள்தோறும் காலை, மாலை இரு வேளை சண்முகார்ச்சனையும், இரவு உற்சவர் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று, திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நவம்பர் ஒன்றாம் தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் ஆலயப் பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் , மறுநாள் சூரசம்காரமும் நடைபெறுகிறது.