கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை: பேரவைச் செயலாளர்

தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில் பிரபுவிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஒருவார கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனை, எம்.எல்.ஏ பிரபுவின் வழக்கறிஞர் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் மேலும் ஒருவாரம் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2 பேர் உச்ச நீதிமன்றத்தை நாடி இருப்பதால், எம்எல்ஏ பிரபு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, சட்டப்பேரவை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

Exit mobile version