மாலத்தீவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள காஜல்..வைரல் போட்டோ

தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல்.இவர் தமிழில் அறிமுகமான போது இவரின் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.பின்பு தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.2012ம் ஆண்டில் சூர்யாவுடன் மாற்றான் திரைப்படமும், விஜயுடன் துப்பாக்கி திரைப்படமும் நடித்தார்.அதற்கு பிறகு காஜலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

தற்போது தமிழில் இருக்கும் முன்னணி நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர் என்று கூறலாம்.சமீபத்தில் சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்க உள்ளனர் என்ற செய்தி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் காஜல் அகர்வால் குடும்பத்துடன் மாலத்தீவு சென்று இந்த ஆண்டின் முடிவை கொண்டாடி வருகிறார்.அவர் அங்கிருந்து பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version