காற்றின் மொழி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இணைய தளங்களில் வைரல்

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் காற்றின் மொழி. ஹிந்தி மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தும்ஹாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜோதிகாவின் மொழி படத்தை இயக்கிய  ராதா மோகன் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். போப்டா மீடியா சார்பில் தனஞ்செயன் படத்தை தயாரித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான பத்து கட்டளைகளுடன் பஸ்ட் லுக் பொஸ்டரில்  ஜோதிகா மிரட்டி உள்ளார்.

Exit mobile version