மேற்கு வங்க அரசுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி நாகேஸ்வர ராவ் விலகல்

மேற்குவங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக நீதிபதி நாகேஸ்வர ராவ் அறிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க காவல்துறை தலைவரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, மேற்குவங்க ஆளுநர், டிஜிபி ராஜீவ் குமார் ஆகியோர் மீது உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அறிவித்தார்.மேலும், வழக்கு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version