மிசோரம் முதல்வராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்றார்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற  ‘மிசோ தேசிய முன்னணி’ தலைவர் ஜோரம்தாங்கா இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

 

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களிலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. மிசோரம் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாகும். கிறிஸ்தவர்களின் ஆதரவும் ஜோரம்தாங்காவின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மிசோரம் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தவரான ஜோரம்தாங்கா, காங்கிரஸ் அரசை அகற்றி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

Exit mobile version