திருப்பூர் மாவட்டத்தில் ரூ.99 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

திருப்பூர் மாவட்டத்தில், 99 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர் திட்டம், 6 ஊராட்சியில் 52 நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு ஒன்றிய பகுதியில் மங்கலம் இடுவாய் முதலிபாளையம் ஊராட்சிகள் வளர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் பல்லடம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் கரைப்புதூர் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிகளும் அபார வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மேற்கொண்ட முயற்சியில், பல்லடம் மற்றும் திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறு ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 38 மேல்நிலை தொட்டிகள், 14 தரை மட்ட நீர்தேக்க தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர், ஆறு ஊராட்சிக்கு உட்பட்ட 155 கிராமங்களுக்கு குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 52 இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Exit mobile version