கோல்டன் குளோப் விருது பெற்ற ஜோக்கர் நாயகன்

ஆஸ்காருக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோகுயின் ஃபோனிக்ஸ் தட்டி சென்றார்.

வெளிநாட்டு பத்திரிகையாளர் அமைப்பால் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருது ஹாலிவுட்டில் ஆஸ்காருக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில், 78 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. இதில், ஜோக்கர் படத்தில் நடித்ததற்காக ஜோகுயின் ஃபோனிக்ஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். முதலாவது உலகப்போரை விவரிக்கும் 1917 படம் சிறந்த திரைப்படமாகவும், இந்த திரைப்படத்தை இயக்கிய சாம் மென்டிஸ் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த ரெனி ஜெல்வேகருக்கு (Renée Zellweger) வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Exit mobile version