சென்னை வளசரவாக்கத்தில் பொறியாளர் வீட்டில் 131 சவரன் கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்தனர்.
வளசரவாக்கம் ராதா நகரை சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஆறுமுகம், கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 131 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், கோவையில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பலை சுற்றி வளைத்தனர். கோவையை சேர்ந்த முருகானந்தம், கோவூர் ஆனந்த், சேலத்தை சேர்ந்த சங்கரபாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்த காவல்துறையினர், 63 சவரன் நகை, 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள திருவாரூரை சேர்ந்த ஜீவானந்தத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.