சென்னையில் பிரபல நகைக் கடையில் 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்பட்ட ஊழியர், தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்த சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக நகைக்கடை மேலாளர் பிரபாகரன் புகார் அளித்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பாதிக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட மற்ற நகைகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.