வேலைபார்க்கும் ஊழியரிடம் கொடுத்த ரூ.30 லட்சம் கொள்ளை – நகைக்கடை உரிமையாளர் மகன் கைது

ராஜபாளையத்தில், நகைக்கடை ஊழியரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நகை உரிமையாளரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில், தென்காசியில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தன்னிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை மர்ப நபர்கள் திருடிச் சென்றதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுனர்.

விசாரணையில், பாலசுப்பிரமணியம் வேலை பார்க்கும் நகைக்கடை உரிமையாளர் முகமது தாகா என்பவர், சென்னையில் உள்ள தனது முதல் மகன் பைசல் அகமதுவிடம் பணத்தை கொடுத்துவிட்டு தங்க நகைகளை வாங்கி வரச் சொன்னதாகவும், அதன் பெயரில் பாலசுப்பிரமணியம் பணத்துடன் சென்றுள்ளதாகவும் தெரியவந்தது.

மேலும், நகைகடை உரிமையாளரின் மற்றொரு மகனான சையது ஜிலாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து சுப்ரமணியிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் மகன் சையது ஜிலாமி உட்பட 2 பேரை ராஜபாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version