ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறித்து ஆய்வு நடத்த மத்திய அமைச்சர் உத்தரவு

நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறித்து ஆய்வு நடத்துமாறு விமான போக்குவரத்து துறை செயலாளருக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சமீபத்தில் தனது 90 சதவீத சேவைகளை ரத்து செய்தது. மேலும் விமானிகள் உள்ளிட்டோருக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஜெட் ஏர்வேஸ் நிலவரம் குறித்து ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை செயலாளருக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக விமான டிக்கெட் விலை உயர்வு, விமான சேவைகள் ரத்து உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யவும், பயணிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியிருக்கும் சுரேஷ் பிரபு, பங்குதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version