அரசியல் சாணக்கியர் என அறியப்படும் பிரஷாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்து அரசியல் சாணக்கியர் என்ற பெயரோடு வலம் வருபவர் பிரஷாந்த் கிஷோர். மோடி பிரதமானதற்கு முக்கிய காரணமே இவர் வகுத்த வியூகம் தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஆம் ஆத்மி மற்றும் தமிழகத்தில் சில கட்சிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பலகோடிகளை கட்டணமாக பெறுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில், பீகாரில், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த பிரஷாந்த் கிஷோர் திடீரென அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நிதீஷ்குமார் ஆதரவாகவும், பிரஷாந்த் கிஷோர் எதிராகவும் செயல்பட்டு வந்தததே பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கட்சியின் கொள்கைக்கு முரணாக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதாலேயே பிரஷாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததாக நிதீஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.