கோயிலுக்கு திரும்பிய ஜெயமால்யதா யானை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாமில் இருந்து ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8-ம் தேதி துவங்கியது. இதில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை, கடந்த மாதம் பாகன்கள் இரண்டு பேர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனையடுத்து யானையை துன்புறுத்திய இரு பாகன்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாகன்கள் இல்லாமல் முகாமில் இருந்து வந்த ஜெயமால்யதா யானையை தற்காலிகமாக வேறொரு பாகன்கள் பராமரித்து வந்த நிலையில், யானையை முழுமையாக பராமரிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதால், யானையை கோயிலுக்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ஜெயமால்யதா யானை லாரி மூலம் மீண்டும் ஆண்டாள் கோயிலுக்கே அனுப்பி வைக்கப்பட்டது.

 

Exit mobile version