ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்து பின் தமிழ்நாட்டின் முதலமைச்சரானவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இதில் தமிழ் மற்றும் இந்தி படவுலகை சேர்ந்த நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இப்படத்தை மதராசபட்டிணம் திரைப்படத்தை இயக்கிய  எல். விஜய், இந்த படத்தை இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Exit mobile version