சென்னை ஜப்பான் திரைப்படத் திருவிழா வரும் 7-ம் தேதி தொடக்கம்

சென்னை ஜப்பான் திரைப்படத் திருவிழா வரும் 7-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் தொடங்க உள்ளது.

ஜப்பான் தூதரகம், ஜப்பான் பவுண்டேசன், மெட்ராஸ் பிலிம் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த திரைப்படத் திருவிழாவை நடத்துகின்றன. இந்த விழாவில், A tale of samurai cooking, Rail truck, The wife of Gegege (கேஜஜ்) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. வரும் 7-ம் தேதி மாலை 6 மணியளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், ஜப்பான் துணை தூதர் Kojiro uchiyama விழாவை தொடங்கி வைக்கிறார்.

Exit mobile version