மத்திய ஜல்சக்தி அபியான் குழு வறட்சி மாவட்டங்களை வளமிக்கதாக மாற்ற ஆய்வு

நீர் பற்றாகுறை உள்ள மாவட்டங்களை நீர் வளமிக்கதாக மாற்ற, பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூலம் மழைநீரை சேமிப்பது உள்ளிட்ட 5 ஆலோசனைகளை, மத்திய ஐல்சக்தி அபியான் குழு வழங்கியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் நீர் பற்றாக்குறை உள்ள 255 மாவட்டங்களை நீர் வளமிக்கதாக மாற்ற, மத்திய அரசு ஒவ்வொறு மாவட்டத்திற்கும் 10 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. இதில் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் தலைமையிலான குழு, தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தினர்.

இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து பாரம்பரிய நீர்நிலைகளை பராமரித்தல், பயனற்ற ஆழ்துழை கிணறுகளில் மழைநீரை சேமிப்பது, நீர் வடிகால் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் வழக்கப்பட்டது.

Exit mobile version