உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் என ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ்சில் ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

ஜி20 மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்த ஜெய் கூட்டணி உருவாக்கட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளின் முதல் எழுத்தை சேர்த்தால் ஜெய் என்று வருகிறது. இது தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜெய் என்றால் இந்தியில் வெற்றியை குறிக்கும் என்பதால் இந்த மூன்று நாடுகளும் இணைந்து உலக அளவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் பங்காற்றும் என்றார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version