அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்து வரும் அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பழமையான சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1.1 கிராம் எடை, 0.5 மில்லி மீட்டர் தடிமன், 1.8 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 1.5 சென்டி மீட்டர் அகலம் கொண்ட உடைந்த சிலை அரச குடும்பத்தை சேர்ந்த நபரை குறிக்கும் சிலையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வரும் நிலையில், தங்கம் மற்றும் செப்பினால் ஆன கை வளையல் கண்டெடுக்கப்பட்டது. தங்கம் மற்றும் தந்தம் உள்ளதால் அந்த இடத்தில் பெரிய அரண்மனை இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.