ரெய்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்! சிக்குவாரா செந்தில் பாலாஜி!

ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரராக உள்ள சச்சிதானந்தம் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆய்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில்  நேற்று சோதனை நடைபெற்று வந்ததையொட்டி இன்று இரண்டாவது நாளாக சோதனையும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இன்று, டாஸ்மாக் லாரிகள் ஒப்பந்ததாரராக உள்ள சச்சிதானந்தம் வீட்டில் 2.1 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமானது கணக்கில் வராத பணமாகும். ஆகவே அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சச்சிதானந்தம் தொடர்பான அலுவலங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. இன்னும் கூட கரூர் மாவட்டங்கள், கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version