கார்த்திக் சிதம்பரம், அவரது மனைவி இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 2015ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். இதன் மூலம் பெறப்பட்ட 7 கோடியே 73 லட்சம் ரூபாய் பணத்தை, வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்துள்ளதாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் விலக்களிக்க கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version