பொதுவாக ரெஸ்டாராண்ட் என்றாலே அனைவரும் குடும்பத்தோடு விரும்பி செல்லும் இடமாகும்.ஆனால், இங்கு ஒரு ரெஸ்டாரண்டை பார்த்தாலே அங்கு சென்று உணவு அருந்து வேண்டும் என்று நம் மனதினுள் ஒரு சின்ன ஆசையை எழுப்புகிறது.அப்படி என்ன ரெஸ்டாரண்ட் ?
நார்வேயின் லிண்டெஸ்னஸ் என்ற கடற்கரையில் பிரம்மாண்டமாக கடலுக்கு அடியில் ஒரு உணவகத்தை வடிவமைத்து உள்ளனர்.இந்த உணவகத்தின் தோற்றமானது கடலுக்கு மேலே ஒரு பாறை போல் உள்ளது.மேலும், அனைவரும் அமர்ந்து உண்ணும் இடத்தை கடலுக்கு அடியில் கண்ணாடி கிளாஸ்களை வைத்து அற்புதமாக வடிவமைத்துள்ளனர்.
உலகிலேயே கடலுக்கு அடியில் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 40 பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு கட்டியுள்ள இந்த உணவகமானது தோற்றத்தில் மட்டுமல்லாமல்,சுவையான உணவினையும் அளிக்கிறது .உணவு உண்ணும் இடத்தில் அங்கு இங்கும் மீன்கள் சுற்றித் வரும் காட்சிகள் கண்ணாடி கிளாஸ்கள் மூலம் கண்களை கவருகிறது.