ஈராக்கில் இருந்து பிற நாடுகளால் கடத்தப்பட்ட கலை பொருட்கள் மீட்பு

ஈராக் ஐரோப்பாவிலிருந்து பிற நாடுகளால் திருடப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டு பாக்தாத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

173 கலைப்பொருட்கள், பிற நாடுகளால் திருடப்பட்டு சமீபத்தில் மீட்கப்பட்டன. தற்போது ஈராக்கின் கலாச்சாரம், சுற்றுலா அமைச்சகம் பாக்தாத்தில் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கலைப்பொருட்கள் இங்கிலாந்து மற்றும் சுவீடனில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் அனைத்தும் ஈராக்கின் வெளியுறவு அமைச்சகத்தில் முதன்முதலில் கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நினைவுச்சின்னங்களை திருடிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்றும், கதவுகளை உடைத்து, முக்கியமான கலாச்சார இடத்தை தாக்கியவர்கள் அமெரிக்கப் படைகள் என்றும் கலாச்சார அமைச்சின் அருங்காட்சியகத்தின் தலைவர் அலி அவைத் அல்-அபாடி குற்றம் சாட்டினார்.

இவை அனைத்தும் அமெரிக்காவின் படையெடுப்பின் போது ஈராக்கிலிருந்து கடத்தப்பட்டதாகவும், மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் தொல்பொருட்கள் உள்ளதாக தெரிவித்தார். இவைகள் அனைத்தும் குறைந்தது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை என குறிப்பிட்டார்

Exit mobile version