தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! இந்தமுறை கோப்பை யாருக்கு?

மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து இனி இளைஞர்களையும் சிறுவர்களையும் கிரிக்கெட் இரசிகர்களையும் கையில் பிடிக்க முடியாது. காரணம் ஐபிஎல் தொடங்குகிறது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையில் தான். இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்று இரசிகர்கள் பலர் எதிர்பார்க்கிறார்கள். ஐபிஎல் தொடங்கி இன்று வரை பெங்களூர், டெல்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இன்னும் கோப்பை வாங்காமல் உள்ளன. அதனுடன் கடந்த வருடம் அறிமுகமான லக்னோ அணியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த வருடம் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக வெளியேறும் இறுதி வருடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவர் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்துவிட்டு செல்வார் என இரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் விராட் கோலியின் கோப்பைக் கனவு. தற்போது விராட் நல்ல பார்மில் உள்ளார். டு பிளெஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியானது நிச்சயம் கோப்பை வெல்ல வேண்டும் என்று பலரது கனவாக உள்ளது. நிச்சயம் விராட் அதனை செய்து காட்டுவார் என்று நம்பப்படுகிறது. இதனைத் தவிர ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கடப்பாரை பேட்டிங்கை கொண்டு இந்த முறை களம் காண உள்ளது. நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று மிகப்பெரிய ஆட்டக்காரர்களைக் கொண்ட அணிகள் கோப்பைக் கனவோடு இந்த ஐபிஎல் சீசனில் களம் காணவுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் திருவிழா மட்டும்தான் நமக்கு…

 

Exit mobile version