சென்னையில் முதன்முறையாக ஸ்மார்ட் பைக் எனப்படும் அதிநவீன சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் பைக் நிறுவனம் இணைந்து , 9.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் ஸ்மார்ட் பைக்குள் வாங்கப்பட உள்ளன. டெல்லி, ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களை தொடர்ந்து சென்னையில் ஸ்மார்ட் பைக் எனப்படும் அதிநவீன சைக்கிள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதில், முதற்கட்டமாக 250 ஸ்மார்ட் பைக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று விடப்பட்டன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்கா என, மக்கள் கூடும் இடங்களில், 25 ஸ்மார்ட் பைக் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.